கிசுகிசுக்கப்பட்ட ஹீரோவுடன் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா!

கிசுகிசுக்கப்பட்ட ஹீரோவுடன் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா!

தன்னோடு கிசுகிசுக்கப்பட்ட ஹீரோவுடன் நடிகை அனுஷ்கா மீண்டும் சேர்ந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார் அனுஷ்கா ஷெட்டி. 2020-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘நிசப்தம்’ படத்திற்குப் பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவர் உடல் எடை அதிகரித்ததால் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

பிரபல பான் இந்தியா ஹீரோ பிரபாஸுடன் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபாஸ், அனுஷ்கா ஜோடி தெலுங்கு சினிமாவின் ஹிட் ஜோடி. ராசியான ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் பில்லா, மிர்ச்சி, பாகுபலி படங்களில் நடித்துள்ளனர்

இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், தாங்கள் நண்பர்கள்தான் என்று இருவருமே தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் ராசியான இந்த ஜோடியை, மீண்டும் சேர்க்க இருக்கிறார் இயக்குநர் மாருதி. இவர் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒருவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ராஜமவுலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தைத் தயாரித்த டிவி தானய்யா தயாரிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in