5-வது கணவரையும் விவாகரத்து செய்தார் பமீலா ஆண்டர்சன்

பமீலா  ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன்

நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன், தனது 5-வது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். வயது 54. பிளேபாய் மாடலான இவர், பேவாட்ச் டிவி தொடர் மூலம் பிரபலமானார். இவர் இசைக் கலைஞர் டோமி லீ என்பவரைக் காதலித்து 1995-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவருடன் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.

5-வது கணவர் டேன் ஹேஹர்ஸ்ட்டுடன் பமீலா
5-வது கணவர் டேன் ஹேஹர்ஸ்ட்டுடன் பமீலா

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, 1998-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். பிறகு, 2006-ம் ஆண்டு, அமெரிக்க ராப் பாடகர் கிட் ராக் என்பவரை மணந்தார், அடுத்த ஆண்டே பிரிந்தனர். 2007-ம் ஆண்டில், விளையாட்டு வீரர் ரிக் சாலமோனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2008-ல் விவாகரத்து செய்தார். அவர்கள் 2014-ல் மீண்டும் திருமணம் செய்து கொண்டு, 2015-ல் மீண்டும் விவாகரத்து பெற்றனர். 2020-ம் ஆண்டில், ஹாலிவுட் தயாரிப்பாளரும் சிகை அலங்கார நிபுணருமான ஜான் பீட்டர்ஸை மணந்து, வெறும் 12 நாட்களில் விவாகரத்து செய்தார்.

பிறகு, தனது பாதுகாவலர் டேன் ஹேஹர்ஸ்ட்(Dan Hayhurst)டை, காதலித்து கடந்த 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வான்கூவர் தீவில் திருமணம் செய்தார். கடந்த 26 ஆண்டுகளில் 5 திருமணங்கள் செய்துள்ள பமீலா, இப்போது டேன் ஹேஹர்ஸ்ட்டையும் விவாகரத்து செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in