ஆலியா பட் படத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய பாக். நடிகர்!
மனைவி அய்மன் கானுடன் பாகிஸ்தான் நடிகர் முனீப் பட்

ஆலியா பட் படத்தின் மொத்த டிக்கெட்டையும் வாங்கிய பாக். நடிகர்!

ஆலியா பட் நடித்துள்ள படத்தை பார்ப்பதற்காக, தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் நடிகர் ஒருவர் வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்த படம், `கங்குபாய் கதியவாடி'. கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில், ஆலியா பட்டின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

ஆலியா பட், முனீப் பட், அய்மன் கான்
ஆலியா பட், முனீப் பட், அய்மன் கான்

இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல நடிகர் முனீப் பட் (Muneeb butt) தனது மனைவி அய்மன் கானுக்காக இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார். இதற்காக தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் புக் செய்த அவர், மனைவி, மகள் அமலுடன் அந்தப் படத்தைப் பார்த்தார். முன்னதாக அவர் தியேட்டருக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில், முனீப் பட் தனது மனைவியிடம், ‘உனக்காக தியேட்டரின் மொத்த டிக்கெட்டையும் புக் செய்துவிட்டேன். கங்குபாய் நன்றாக இல்லை என்றால், யேஹ் நா தி ஹமாரி ஹிஸ்மத் (பாகிஸ்தானில் ஒளிப்பரப்பாகும் டி.வி தொடர்) தொடரின் கடைசி எபிசோடை பார்க்கலாம்’ என்று சொல்கிறார்.

மனைவிக்காக மொத்த டிக்கெட்டையும் வாங்கிய நடிகரை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.