சினிமா கதைத் திருட்டை மையமாக வைத்து ஒரு படம்!

சினிமா கதைத் திருட்டை மையமாக வைத்து ஒரு படம்!
படைப்பாளன் -அஸ்மிதா

சினிமாவில் நடக்கும் கதை திருட்டை மையமாக வைத்து புதிய படம் உருவாகி இருக்கிறது.

தியான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் "படைப்பாளன்". சினிமாவில் நடக்கும் கதைத் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை தியான் பிரபு இயக்குகிறார்.

`காக்கா முட்டை' ரமேஷ் விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் நட்புக்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பாலமுரளி இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் தியான் பிரபு கூறும்போது, ``சினிமாவில் இயக்குநராக துடிக்கும் உதவி இயக்குநர் பற்றிய கதையை கொண்ட படம் இது. இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள். அவர்கள் முழு ஸ்கிரிப்ட் கொடுங்கள், படித்துவிட்டு சொல்கிறோம் என்று கதையை வாங்குகிறார்கள். பிறகு சில மாதங்களுக்குப் பிறகு, பிரபலமான இயக்குநர்களை வைத்து அந்தக் கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள். அப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கதை சொல்லப் போன உதவி இயக்குநரின் சொந்த கதைதான் இந்தப் படம்'' என்றார்.

படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Related Stories

No stories found.