பா.ரஞ்சித்தின் `நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா.ரஞ்சித்தின் `நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு 'நட்சத்திரம் நகர்கிறது' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டென்மா இசை அமைக்கிறார். உமாதேவி, அறிவு பாடல்கள் எழுதுகின்றனர். முழுக்கக் காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதன் டீசர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 31-ம் தேதி, இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை அடுத்து, விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் பீரியட் படமாக உருவாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in