நடிகர் விக்ரம்- பா.ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

நடிகர் விக்ரம்- பா.ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

நடிகர் விக்ரம்- பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் அவர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

நீலம் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22-வது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, அபினேஷ் இளங்கோவன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in