பாலிவுட் செல்கிறார் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித், இந்தியில் படம் இயக்க இருக்கிறார்.

தமிழில், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், கடைசியாக ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி இருந்தார். ஓடிடியில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

கிஷோர் அரோரோ, ஷரீன் மன்த்ரி, பா.ரஞ்சித்
கிஷோர் அரோரோ, ஷரீன் மன்த்ரி, பா.ரஞ்சித்

இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையை இந்தியில் படமாக இயக்க இருக்கிறார். இதுகுறித்து பா.ரஞ்சித் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை நமாஹ் பிக்சர்ஸ் (Namah Pictures) சார்பில் ஷரீன் மன்த்ரி, கிஷோர் அரோரோ தயாரிக்கின்றனர். 'பிர்சா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in