3 வருடத்துக்குப் பின் ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளர்!

ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருது

‘இந்த வருடம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் இடம்பெறுவார்’ என்று ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கான உயர்ந்த விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருதைப் பெறுவது திரைக் கலைஞர்களின் கனவாகவும் இருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த விருது விழாவை காண்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இந்த விழாவை ஏபிசி தொலைக்காட்சி ஒளிப்பரப்புவது வழக்கம். இந்த விழாவை போலவே, விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் அவர் எப்படித் தொகுத்து வழங்குகிறார் என்பதும் கவனம் பெறுவது வழக்கம்.

2019-ம் ஆண்டில் நடிகர் கெவின் ஹார்ட் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஒரே பாலின விருப்பமுள்ளவர்கள் தொடர்பாக, அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. கெவின் ஹார்ட் மன்னிப்பு கேட்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்று சொல்லப்பட்டதால், அவர் நிகழ்ச்சியை தொகுப்பதில் இருந்து விலகினார்.

கடந்த 2020, 21-ம் ஆண்டுகளிலும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழா நடைபெற்றது. இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் 3 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளருடன் நடைபெற இருக்கிறது. இதை ஏபிசி நிறுவனத் தலைவர் கிரேக் எர்விச் அறிவித்துள்ளார்.

“இந்த வருடம் ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் இருப்பார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்ற அவரிடம், “யார் தொகுத்து வழங்குவார்” என்று கேட்டபோது, “நானாகவும் இருக்கலாம்” என்று கிண்டலாகத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in