’வில் ஸ்மித்தை கைது செய்ய தயாரானது போலீஸ் ’

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தகவல்
’வில் ஸ்மித்தை கைது செய்ய தயாரானது போலீஸ் ’

``சக நடிகரை தாக்கிய வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராக இருந்தனர்'' என்று ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வில் பாக்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்-டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார்.

மனைவி பற்றி கிண்டலாக, கிறிஸ் ராக் பேசியதை தாங்கிக் கொள்ளாத வில் ஸ்மித், மேடைக்குச் சென்று அவர் கன்னத்தில் அறைந்தார். பின்னர் இந்தச் சம்பவத்திற்காக. வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

வில் பாக்கர்
வில் பாக்கர்

இந்த விவகாரம் பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் இன்னும் ஓடி கொண்டிருக்கின்றன. இதற்கிடையே, ஆஸ்கர் விருது நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் வில் பாக்கர், அந்த சம்பவம் நடந்ததும் வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராக இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

’ஸ்மித் அடித்த பின் கிறிஸ் ராக் என்னுடன்தான் இருந்தார். போலீஸார், புகார் கொடுத்தால், உடனடியாக கைது செய்கிறோம் என்று ராக்கிடம் கேட்டனர். ஆனால், அவர், நான் நன்றாக இருக்கிறேன். புகார் கொடுக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in