சிறந்த படம்: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது 'கோடா'

சிறந்த படம்: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது 'கோடா'

ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படமாக கோடா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அங்குள்ள டால்பி திரையரங்கில் நடந்த இந்த விழா, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்ட இந்த விழாவை, இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆஸ்கர் விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுதான் முதன்முறை.

இந்த விருது விழாவில், சிறந்த படமாக’கோடா’(Coda) தேர்வு செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினர் இந்த விருதை பெற்றனர்.

சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, காட்சி அமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ’டியூன்’ படம் ஆஸ்கர்

விருதுகளை வென்றுள்ளது.

மற்ற விருது விவரம்:

சிறந்த நடிகர்: வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்).

நடிகை: ஜெசிகா சாஸ்டைன் (தி ஐஸ் ஆஃப் டேம்மி ஃபேய்)

துணை நடிகர்: ட்ராய் கோட்சர் (Coda)

துணை நடிகை: அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி).

இயக்குநர் ஜானே கேம்பியன்
இயக்குநர் ஜானே கேம்பியன்

சிறந்த திரைக்கதை: கென்னத் ப்ரனாக் (பெல்பாஸ்ட்)

தழுவல் திரைக்கதை: சியான் ஹெடர் (கோடா)

இயக்கம்: ஜானே கேம்பியன் (தி பவர் ஆப் த டாக்)

ஒரிஜினல் இசை: பில்லி எய்லிஷ், பின்னியாஸ் ஓ கானல் (நோ டைம் டு

டை)

அனிமேஷன் திரைப்படம்: என்கான்டோ

அனிமேஷன் குறும்படம்: தி விண்ட்ஷீல்ட் வைபர்

ஆவணப்படம்: தி லாங் குட்பாய்

சிகை மற்றும் ஒப்பனை: தி ஐஸ் ஆஃப் டேம்மி ஃபேய்

வெளிநாட்டுத் திரைப்படம்: டிரைவ் மை கார் (ஜப்பான்)

காஷ்ட்யூம் டிசைன் : ஜென்னி பீவன் (குருயல்லா)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in