ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் சூர்யாவின் ’ஜெய் பீம்’

ஜெய் பீம்
ஜெய் பீம்

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கிய படம், ’ஜெய் பீம்’. இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. உண்மைக் கதையை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்தப் படம், பலத்த வரவேற்பைப் பெற்றது. அரசியல் தலைவர்களில் இருந்து ரசிகர்கள் வரை இந்தப் படத்தைக் கொண்டாடினர்.

இந்நிலையில் சமீபத்தில், ஆஸ்கர் அகாடமியின் அதிகாரபூர்வ யூ-டியூப் பக்கத்தில், சீன் அட் த அகாடமி என்ற தலைப்பில், ’ஜெய் பீம்’ படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஜாக்கி, குருயெல்லா, ட்யூன். ஏஞ்சல்ஸ் லவ், பிளாக் விடோ, பூகி, கேண்டிமேன் , கிங் ரிச்சர்ட் உள்ளிட்ட படங்களுடன் ஜெய் பீம் படமும் போட்டியிடுகிறது.

ஆஸ்கர் விருது நிகழ்ச்சி மார்ச் 27-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த ‘ஜெய் பீம்’ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in