ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் ஸ்மித், சிறந்த நடிகை ஜெஸ்ஸிகா

ஆஸ்கர் விருது: சிறந்த நடிகர் ஸ்மித், சிறந்த நடிகை ஜெஸ்ஸிகா
வில் ஸ்மித்

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வில் ஸ்மித்தும், சிறந்த நடிகைக்கான விருதை ஜெஸ்ஸிகாவும் வென்றுள்ளனர்.

94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. கிங் ரிச்சர்ட் படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். வீனஸ்- செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஸ்மித்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

ஜெஸ்ஸிகா கோஸ்டையன்
ஜெஸ்ஸிகா கோஸ்டையன்

சிறந்த நடிகைக்கான விருதை The Eyes Of Tammy Faye படத்தில் நடித்த ஜெஸ்ஸிகா கோஸ்டையன் வென்றுள்ளார்.

சிறந்த இயக்குநருக்கான விருதை The Power of the Dog படத்திற்காக ஜேன் கேம்பியன் பெற்றுள்ளார்.

சிறந்த படத்துக்கான விருதை பெண் இயக்குநர் சியான் ஹீடர் இயக்கிய கோடா படம் தட்டுச்சென்றது.

Related Stories

No stories found.