ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் குஜராத்தி படம் போட்டி

ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் குஜராத்தி படம் போட்டி

95-வது ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக திரைத்துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுவது வழக்கம்.

இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் தேர்வாகியுள்ளது. பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கெனவே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று சில விருதுகளைப் பெற்றுள்ளது.

இதனிடையே இயக்குநர் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் பைல்ஸ்' உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் தேர்வு போட்டி பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in