பல கோடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் அஜித் - ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து

பல கோடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் அஜித் - ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து
அஜித் குமார்

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு இன்று 51-வது பிறந்தநாள். 1971-ம் ஆண்டு மே 1-ம் தேதி பிறந்த அஜித்குமார், கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் அவரது 60-வது திரைப்படமாகும்.

ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமார் தனது ரசிகர்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்புக்குரியவர். இன்று அவரது 51- வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தங்கள் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும் அஜித்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் 'உழைப்பால் உயர்ந்து பல கோடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அஜித் குமாருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.