
குற்றத்தின் தடயமாக கிட்டும் ஒரு வார்த்தையை பின்தொடர்ந்து சென்று குற்றவாளிகளை அடையாளம் காணும் சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியாகவிருக்கிறது ’டி 3’ திரைப்படம்.
எப்பேர்பட்ட குற்றவாளியாக இருப்பினும், குற்ற நிகழ்விடத்தில் ஏதேனும் ஒரு தடயத்தை விட்டுச் செல்வான் என்பது புலனாய்வுகளின் பாலபாடம். டி3 திரைப்படத்தில், குற்ற நிகழ்விடத்தில் ஒரு வார்த்தை மட்டுமே சிக்குகிறது. அந்த தடயத்தை பின்தொடர்ந்து குற்றவாளிகள் எப்படி சிக்குகிறார்கள் என்பதை சுவாரசியமாக சொல்கிறது டி3 திரைப்படம்.
கரோனா நெருக்கடி காலத்தில் உருவான இந்த திரைப்படம், பல்வேறு தடைகள் தாண்டி மார்ச் 17 அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் நாயகனாக சின்னத்திரையில் தனது கலைப் பயணத்தை தொடங்கிய பிரஜின் நடிக்கிறார். பாலாஜி எழுதி இயக்க, மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் முன்கதை அடுத்த 2 பாகங்களாக வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.