‘சக்திமான்’ ஆகிறாரா பிரபல ஹீரோ?

‘சக்திமான்’ ஆகிறாரா பிரபல ஹீரோ?

தூர்தர்ஷனில் வெளியான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ’சக்திமான்’. 90-களில், சிறுவர்களை மொத்தமாகக் கட்டிப்போட்ட சூப்பர் ஹீரோ தொடர் இது. இந்தி நடிகர் முகேஷ் கன்னா, பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கர்நாத் சாஸ்திரி என்ற 'சக்திமான்' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரே இந்தத் தொடரையும் தயாரித்திருந்தார். இந்தத் தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டும் ஒளிபரப்பானது.

முகேஷ் கன்னாவுடன் வைஷ்ணவி மஹந்த், கிது கிட்வானி, சுரேந்திர பால், டாம் அட்லர், லலித் பரிமூ உட்பட பலர் நடித்திருந்தனர். தின்கர் ஜானி இயக்கி இருந்தார். 1997 முதல் 2005-ம் ஆண்டு வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்தத் தொடர், கரோனா ஊரடங்கு காலத்தில் மீண்டும் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தொடர் இப்போது சினிமாவாகிறது. இதை சோனி பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தது. பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் சக்திமானாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரண்வீர் சிங் சக்திமானாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்தப் படத்தை பிரபல இந்தி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் ஓம் ராவத் தற்போது, பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தை இயக்கி வருகிறார். ’சக்திமான்’ படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in