சென்னையில் 'ஓ மை கோஸ்ட்’ இசை வெளியீட்டுவிழா: நடிகை சன்னி லியோன் நாளை பங்கேற்கிறார்

சென்னையில் 'ஓ மை கோஸ்ட்’ இசை வெளியீட்டுவிழா: நடிகை சன்னி லியோன் நாளை பங்கேற்கிறார்

சென்னையில் நாளை நடைபெறும் ‘ஓ மை கோஸ்ட்’ தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்கிறார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான சன்னி லியோன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் சிங்கில் பாடலுக்குச் சன்னி லியோன் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதல் முறையாகக் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சதீஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் அவருடன் நடித்துள்ளனர்.  இந்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டிரேட் சென்டரில் நாளை மாலை ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோல் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in