'ஓ மை டாக்' குழந்தைகளுக்கான உணர்வுபூர்வ படம்: அருண் விஜய்

'ஓ மை டாக்' குழந்தைகளுக்கான உணர்வுபூர்வ படம்: அருண் விஜய்
அருண் விஜய், அர்னவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழந்தைகளுக்கான முழு நீள திரைப்படமாக `ஓ மை டாக்' உருவாகி இருக்கிறது என்று நடிகர் அருண் விஜய் சொன்னார்.

2டி நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம், 'ஓ மை டாக்' . அமேசானில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமேசான் பிரைமில் இந்தப் படம் வரும் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் பற்றி அருண் விஜய் கூறும்போது, ''இந்தப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்குமான தனித்துவமான நட்பு மற்றும் அழகான தருணங்களை சொல்கிறது. இதன் திரைக்கதையை கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை உணர்ந்தேன். பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது.

தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இதில் என் மகன் அர்னவ் நடித்தது அதிர்ஷ்டம் என்றே நம்புகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.