`நயன்தாரா தான் இந்த படத்தின் ஆக்சிஜன்': ஜுன் 17-ல் ஓடிடியில் வெளியாகிறது `O2'

`நயன்தாரா தான் இந்த படத்தின் ஆக்சிஜன்': ஜுன் 17-ல் ஓடிடியில் வெளியாகிறது `O2'

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள `O2' திரைப்படம் வரும் 17-ம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது.

ஓடிடி தளமான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் திரைப்படம் `O2'. இந்த திரைப்படம் ஜூன் 17-ம் தேதி பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, ஆர்என்ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிகொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை, பேருந்தில் மாட்டிக்கொண்ட மற்றொரு பயணியான காவல் அதிகாரி குறிவைக்க, தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தான் `O2'. தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் விக்னேஷ், "இந்த கதையை குறுகிய காலத்தில் முடிக்க காரணம் தயாரிப்பாளர் தான். நயன்தாரா சிறப்பான நடிகை, அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். அவர் என் மேல் முழு நம்பிக்கையையும் வைத்திருந்தார். அவர் தான் இந்த படத்தின் ஆக்சிஜன். இந்த படம் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டது. இந்த படம் வலிமையான பெண்களுக்கு சமர்ப்பணம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in