தமிழில் அறிமுகமாகிறார் பிரபல நடிகையின் சகோதரி

நுபுர் சனோன்
நுபுர் சனோன்

பிரபல நடிகையின் சகோதரி, பான் இந்தியா படம் மூலம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோன். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக `நேனொக்கடினே' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் இந்திக்கு சென்ற அவர், இப்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். தப்போது பிரபாஸ் ஜோடியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.

நுபுர் சனோன்
நுபுர் சனோன்

இவருடைய சகோதரி, நுபுர் சனோன். இவர் சினிமாவில் அறிமுகமாக பல வருடங்களாக முயன்று வந்தார். வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது நவாஸுதின் சித்திக் ஜோடியாக `நூரானி சேஹ்ரா' என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது.

நுபுர் சனோன்
நுபுர் சனோன்

இப்போது தெலுங்கு ஹீரோ ரவிதேஜா நடிக்கும் ’டைகர் நாகேஷ்வர ராவ்’ படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பான் இந்தியா படமான இதை வம்சி இயக்குகிறார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் மூலம் நுபுர் சனோன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அறிமுகமாகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in