படப்பிடிப்பில் திடீர் மோதல்: நடிகர் மீது புகார்
ஷைன் டோம் சாக்கோ

படப்பிடிப்பில் திடீர் மோதல்: நடிகர் மீது புகார்

திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டோவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன், ஷராபுதீன், செம்பன் வினோத், ஷைன் டோம் சாக்கோ உட்பட பலர் நடிக்கும் மலையாள படம், ’தள்ளுமாலா’ (Thallumaala). இதை காலித் ரஹ்மான் இயக்குகிறார். ஆசிக் உஸ்மான் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள களமச்சேரி பகுதியில் நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்புக்காக, வந்த வாகனங்கள் அதிக அளவில் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு அந்தப் பகுதியில் படக்குழுவினரால் அதிகமாகக் குப்பைகள் கொட்டப்பட்டதாகத் தெரிகிறது.

கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்

இதனால், அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் அது வாக்குவாதமாக மாறி மோதலானது. அடுத்து ஏற்பட்ட கைகலப்பில், நடிகர் ஷான் டோம் சாக்கோ, ஒருவரை அடித்துத் தள்ளியதாக புகார் கூறப்பட்டது.

போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த அவர்கள், இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின் அந்தப் பகுதியினர் கலைந்து சென்றனர்.

யாரும் புகார் செய்யவில்லை என்றதால், வழக்குப் பதிவு செய்யவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in