`வலிமை' பட தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்

கதை தொடர்பாக பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
`வலிமை' பட தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்

`வலிமை' படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தங்களோட படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க `வலிமை' படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தங்களோட படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ படத்தின் புரொடக்‌ஷன் நிறுவனமான ஜே.கே.கிரியேஷன்ஸ் சார்பில் அதன் உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், "தான் தயாரித்த ‘மெட்ரோ’ படத்தில் உள்ளது போல் `வலிமை' படத்தில் போதைப் பொருள் கடத்தலில் தனது தம்பிக்கு தொடர்பு உள்ளதை அறியும் ஹீரோ, தம்பியை கொல்வது போன்று காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. `மெட்ரோ' படத்தை இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் தயாரிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இதே பாணியில் `வலிமை' திரைப்படம் வெளியாகியுள்ளதால் தங்கள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. அதனால் `வலிமை' படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்கவேண்டும். மேலும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக வரும் 17ம் தேதிக்குள் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in