ஓராண்டாக நிலவரி 22 ஆயிரம் செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்: தாசில்தார் நோட்டீஸால் பரபரப்பு

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய்

நில வரிக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் பாக்கி வைத்துள்ள 22 ஆயிரம் ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்று தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அழகியும், திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகரான அமிதாப் பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய்க்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சின்னார் தாலுகாவிற்குட்பட்ட தங்கோன் கிராமத்தில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இதற்கு கடந்த ஓராண்டாக ஐஸ்வர்யா ராய் நில வரி செலுத்தவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட சின்னார் தாலுகா தாசில்தார், ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்," இந்த நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் வரிப்பணம் முழுவதையும் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் சினிமாவிலும், விளம்பரங்கள் மூலம் சம்பாதித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய், 22 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தாதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in