`இப்படி ஒரே மேடையில உட்காருவோம்னு நினைக்கவே இல்லை’: மகளை நினைத்து இயக்குநர் உருக்கம்!

`இப்படி ஒரே மேடையில உட்காருவோம்னு நினைக்கவே இல்லை’: மகளை நினைத்து இயக்குநர் உருக்கம்!

``என் மகளுடன் ஒரே விழா மேடையில் இருப்பேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை'' என பிரபல இயக்குநர் தெரிவித்தார்.

தமிழில், கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர் உட்பட பல படங்களை இயக்கியவர், மலையாள இயக்குநர் பிரியதர்ஷன். இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் மனைவி நடிகை லிஸி. இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். பிரியதர்ஷனும் லிஸியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

கல்யாணி, இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் ஹீரோ, மாநாடு படங்களில் நடித்துள்ள கல்யாணியும் அவர் தந்தை பிரியதர்ஷனும் கேரளாவின் திருச்சூர் பூங்குன்றம் சீதா ராமசுவாமி கோயில் இசை விழாவை, சமீபத்தில் தொடங்கி வைத்தனர்.

கல்யாணி, இயக்குநர் பிரியதர்ஷன்,
கல்யாணி, இயக்குநர் பிரியதர்ஷன்,

நிகழ்ச்சியில் இயக்குநர் பிரியதர்ஷன் பேசியதாவது:

``என் மகள் என்னுடன், இதுபோன்ற மேடையில் உட்காருவார் என்று நினைத்ததில்லை. சினிமாவில் நடிப்பாள் என்றும் நினைத்துப் பார்க்கவில்லை. அமெரிக்காவில் ஆர்க்கிடெக் படிக்கச் சென்ற அவர், அதை முடித்துவிட்டு திரும்பினார். ஒரு நாள், நானே ஆச்சரியப்படும்படி, நாகார்ஜுனா தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது, நடிக்கட்டுமா? என்று கேட்டாள்.

அப்போது அனைத்து கடவுள்களிடமும் அவளுக்காகப் பிரார்த்தனை செய்தேன். ஏனென்றால் அவள் சினிமாவில் தோல்வியுற்றால் அது என்னை விட அவளை அதிகம் பாதிக்கும் என நினைத்தேன். ஆனால், அவள் சிறப்பாக நடித்தாள். ஒரு தந்தை, தன் மகளுடன் மேடையை பகிர்ந்து கொள்வதைவிட பெரிய விஷயங்கள் ஏதுமில்லை.

இவ்வாறு பிரியதர்ஷன் கூறினார்.

Related Stories

No stories found.