படப்பிடிப்பில் பிரபல நடிகர் `கொச்சி நாகேஷ்’ மரணம்: கழிவறையில் விழுந்து கிடந்தார்!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் `கொச்சி நாகேஷ்’ மரணம்: கழிவறையில் விழுந்து கிடந்தார்!

படப்பிடிப்பில் நடிகர் ’கொச்சி நாகேஷ்’ திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல மலையாள திரைப்பட நடிகர் வி.பி.காலித் (70). சின்னத்திரை தொடர்களிலும் மேடை நாடகங்களிலும் நடித்து வந்த இவரை, கொச்சி நாகேஷ் என்று அழைத்து வந்தனர். இவர் ஜூட் ஆண்டனி என்பவர் இயக்கும் படத்தில் கடந்த சில நாட்களாக நடித்து வந்தார். வைக்கோம் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

படப்பிடிப்பில் இன்று கலந்துகொண்ட காலித், காலை சிற்றுண்டிக்குப் பிறகு கழிவறைக்குச் சென்றார். அங்கிருந்து நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவருடன் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். அப்போது சுயநினைவின்றி விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பில் மூத்த நடிகர் ஒருவர் உயிரிழந்தது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு நடிகர்கள் மம்மூட்டி, ஆசிப் அலி, நடிகை மஞ்சு வாரியர் உட்பட மலையாளத் திரையுலகினர் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

மறைந்த நடிகர் காலித்துக்கு ஷைஜு, ஜிம்ஷி, காலித் ரஹ்மான் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். ஷைஜு காலித், ஜிம்ஷி காலித் இருவரும் ஒளிப்பதிவாளர்களாகவும் காலித் ரஹ்மான் இயக்குநராகவும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in