372 படங்களில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

372 படங்களில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

சுமார் 372 படங்களில் நடித்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் கடலி ஜெயசாரதி. இவர் 1961-ம் ஆண்டு வெளியான சீதாராம கல்யாணம் படம் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து ஜகன் மோகினி, பக்த கண்ணப்பா, டிரைவர் ராமுடு, குடாச்சாரி நம்பர் 1 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சுமார் 372 படங்களில் அவர் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நலப்பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஜகன் மோகினி படத்தில்...
ஜகன் மோகினி படத்தில்...

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து தெலுங்கு சினிமாவை ஹைதராபாத்துக்கு மாற்றுவதில் தீவிர பங்காற்றியவர் இவர். ஆந்திர சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன பொருளாளராகவும் பணியாற்றினார்.

மறைந்த ஜெயசாரதியின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in