பிரபல இயக்குநர் காலமானார்: திரைத்துறையினர் சோகம்

பிரபல இயக்குநர் காலமானார்: திரைத்துறையினர் சோகம்

பிரபல வங்காள திரைப்பட இயக்குநர், தருண் மஜூம்தார் காலமானார். அவருக்கு வயது 92.

பிரபல வங்காள இயக்குநர் தருண் மஜூம்தார் . இவர் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அதில் 'பலிகா பது', 'குஹேலி', 'ஸ்ரீமர் பிருத்விராஜ்', 'தாதர் கீர்த்தி' ஆகிய குறிப்பிடத்தக்கவை. இவர், சிறந்த இயக்கத்துக்காக, நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ’அதிகார்’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், முதுமை காரணமாக திடீரென உடல் நலம் குன்றியது. இதற்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் உடல் நிலை சமீபத்தில் முன்னேற்றம் கண்டது. இந்நிலையில் அவர் உடல்நிலை நேற்று மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவர் மறைவு, திரைத்துறையினருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in