கவர்ச்சி மட்டுமல்ல; கடின உழைப்பும் உண்டு - தர்ஷா குப்தா காட்டம்!

  தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா

கவர்ச்சி மட்டுமல்ல கடின உழைப்பும் என்னிடம் உண்டு என தர்ஷா குப்தா வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.

‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்தவர் நடிகை தர்ஷா குப்தா. தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடிகையாகவும் அறிமுகமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றி பிரபலமடைய நினைக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது அதிகம் வைக்கப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தர்ஷா குப்தா ‘ஓ மை கோஸ்ட்’ படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘கவர்ச்சியைத் தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள்’ என்று கூறிய அனைவருக்கும் இந்த ’ஓ மை கோஸ்ட்’ படத்தின் பிடிஎஸ் வீடியோவை சமர்ப்பிக்கிறேன். எதுவுமே சாப்பிடாமல், காலையில் இருந்து மாலை 6 மணிவரை சிறிதளவு கூட தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இந்தக் காட்சியை எடுத்தோம். கடினமான உழைப்பு இல்லாமல் எதுவுமே எளிதாக நடக்காது. லவ் யூ ஆல்’ என பதிவிட்டுள்ளார். தர்ஷாவின் இந்தப் பதிவினை பலரும் வரவேற்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இது குறித்து காமதேனு யூடியூப் தளத்திற்கும் கொடுத்த பேட்டியில் தர்ஷா குப்தா விளக்கம் கொடுத்திருந்தார். அவர் அதில் கூறியதாவது, ‘க்ளாமர் ஷூட் மட்டுமல்ல, ஹோம்லியாகவும் நிறைய ஷூட் செய்திருக்கிறேன். ஆனால், அது குறித்து எல்லாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். ரீச் இருக்காது. யார் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் இருக்கதான் செய்யும். விஜய் சார் ஸ்டைலில் எதிர்மறை விமர்சனங்களை தள்ளி வைத்து விட வேண்டும். ஆரம்பத்தில் இதுகுறித்து என் குடும்பத்திலும் பயம் இருந்தது. ஆனால், உடை என்பது வேறு. ஒருவருடைய குணாதிசியம் வேறு என்பதை என் குடும்பத்திற்கு புரிய வைத்தேன். இப்போது அவர்களுடைய ஆதரவும் எனக்கு இருக்கிறது’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in