சொத்து மதிப்பு ரூ.900 கோடி! ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

ஐஸ்வர்யா ராய் -  பிரியங்கா சோப்ரா
ஐஸ்வர்யா ராய் - பிரியங்கா சோப்ரா

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையின் விவரம் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பிறகும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநரின் சம்பளம் அதிகமாவது வழக்கம். குறிப்பாக நடிகர்களின் புதிய பட சம்பளம் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவர். அந்த வகையில், தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையின் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, சீனாவைச் சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகையின் தற்போதைய சொத்து மதிப்பு 900 கோடி ரூபாய் என விவரம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது ஜப்பான், கொரியன், இந்திய நடிகைகளின் சொத்து மதிப்பை விடவும் இவர் அதிகம் வைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 800 கோடி ரூபாய்.

நடிகை பிங் பிங்...
நடிகை பிங் பிங்...

அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவர்தான் முன்னிலையில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர். கடந்த 2018ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக மூன்று மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார். வரி ஏய்ப்பு செய்ததற்காக மட்டுமே அவரது தற்போதைய சொத்து மதிப்பை விட அதிக அபராதம் (1000 கோடி ரூபாய்) விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in