நடிகர் திலீப்பிடம் மஞ்சு வாரியர் போனில் பேசியது என்ன?

நடிகர் திலீப்பிடம் மஞ்சு வாரியர் போனில் பேசியது என்ன?

நடிகர் திலீப்பிடம் தனிப்பட்ட முறையில் போனில் ஏதும் பேசவில்லை என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் மற்றும் அவர் உறவினர்கள் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் அவசர மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீசார், விசாரணைக்கு நடிகர் திலீப் ஒத்துழைக்கவில்லை என்றும் செல்போனை அவர் தரமறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

நடிகர் திலீப், மஞ்சு வாரியர்
நடிகர் திலீப், மஞ்சு வாரியர்

இதையடுத்து நடிகர் திலீப், போலீசாரிடம் சாட்சியத்தை வழங்க மறுப்பதை சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க முடியும் என்று சுட்டி காட்டிய நீதிமன்றம், திலீப் தரப்பில் அவர் வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களை நிராகரித்தது. திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அவருடைய 6 செல்போன்களையும் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப் செல்போனை சமர்பிக்க மறுத்ததற்கான சில காரணங்களை அவர் வழக்கறிஞர் சொன்னார். அதில், ’மஞ்சு வாரியருடன் தனிப்பட்ட முறையில் நடிகர் திலீப் பேசிய பேச்சுகள் வெளியாகிவிடும்’ என்பதால் அதை சமர்பிக்க மறுத்தார் என்ற காரணமும் ஒன்று.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் இதுபற்றி போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, தனிப்பட்ட முறையில் திலீப்பிடம் எதுவும் பேசவில்லை என்றும் தனது மகள் குறித்து மட்டுமே ஓரிரு முறை பேசியதாகவும் மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in