`எந்த கடவுளும் பாகுபாடு பார்க்கவில்லை’- ஐஷ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்`எந்த கடவுளும் பாகுபாடு பார்க்கவில்லை’- ஐஷ்வர்யா ராஜேஷ்!

``எந்த கடவுளும் ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்கவில்லை'' என நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி பேசுபொருளான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் கண்ணன் இயக்கத்தில் தமிழில் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஐஷ்வர்யா ராஜேஷிடம், ‘மாதவிலக்கை காரணம் காட்டி பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘எந்த கடவுளும் ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை.

அப்படி எந்த கடவுளாவது கூறியிருக்கிறதா என்பதைத் தெளிவுப்படுத்துங்கள். நாம்தான் பெண்களை மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குள் நுழையக்கூடாது என சொல்லி ஒதுக்கி வைத்திருக்கிறோம். இன்னும் சில இடங்களில் அது பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது’ என பேசியிருக்கிறார். மேலும், ‘உங்கள் கணவர் சமைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?’ என கேட்டபோது, ‘சமைக்க தெரிந்தால் சமைக்கட்டும், இல்லை என்றால் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ள போகிறோம்’ எனவும் பேசியுள்ளார் ஐஷ்வர்யா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in