ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி: படப்பிடிப்பு தொடக்கம்

ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி: படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் ராம் இயக்கும் அவரது அடுத்த திரைப்படத்தில், நிவின் பாலி நடிக்கிறார். இத்திரைப்படத்தை, ‘வி ஹவுஸ் புரொடக் ஷன்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. நிவின் பாலி, அஞ்சலி முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இதன் 2-வது கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் நடக்கவிருக்கின்றன. 4 வருடங்களுக்கு முன்பு நிவின் பாலி, ‘ரிச்சி’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் பிசியாக இருந்த நிவின் பாலி, தற்போது மீண்டும் தமிழில் நடிக்கவிருக்கிறார்.

Related Stories

No stories found.