மெகா ஸ்டார் படத்தில் நிவேதா பெத்துராஜ்

மெகா ஸ்டார் படத்தில் நிவேதா பெத்துராஜ்

சிரஞ்சீவியின் 154-வது படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி இப்போது ’காட்ஃபாதர்’ படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் ரீமேக். மோகன் ராஜா இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, சத்யதேவ், நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் படத்தை பாபி இயக்குகிறார். சிரஞ்சீவியின் 154-வது படமான இதில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இதில், பிரபல தெலுங்கு ஹீரோ ரவிதேஜா முக்கிய வேடத்தில், கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார். அதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ரவிதேஜா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ், இப்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

Related Stories

No stories found.