'நான் யாரையும் காதலிக்கவில்லை’: திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட ஹீரோயின்!

'நான் யாரையும் காதலிக்கவில்லை’: திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் பட ஹீரோயின்!

மலையாள ஹீரோவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பிரபல நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். பெங்களூருவைச் சேர்ந்த இவர் தமிழில், 'காஞ்சனா 2', 'ஓ காதல் கண்மணி', '24', 'இருமுகன்',' மெர்சல்', 'சைக்கோ' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தனுஷுடன் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மலையாளத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்துள்ள '19 (1)(A)' படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள இளம் ஹீரோ ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

அவர் அடுத்துப் புதிய படங்கள் ஏதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதனால் அவர் திருமணத்துக்குத் தயாராகி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தச் செய்தி வெறும் வதந்தி என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். ’’சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் எனது திருமணம் பற்றி செய்திகளில் உண்மை இல்லை. யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in