
நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், தமிழ் நடிகர் ஒருவர் தன்னைத் துன்புறுத்தியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் இணையத்தில் தீ போல பரவியது.
இந்நிலையில், இந்த தகவல் பொய்யானது என்றும், அப்படி ஒரு நேர்காணல் நடக்கவில்லை என்றும் நடிகை நித்யா மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.