`6 வருடங்களாக தொந்தரவு செய்கிறார்'- இளைஞர் மீது நடிகை நித்யா மேனன் பரபரப்பு புகார்

`6 வருடங்களாக தொந்தரவு செய்கிறார்'- இளைஞர் மீது நடிகை நித்யா மேனன் பரபரப்பு புகார்

ஆறு வருடங்களாக, இளைஞர் ஒருவர் தொந்தரவு செய்வதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். இவர், திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதை அவர் மறுத்திருந்தார். இதற்கு காரணம் சந்தோஷ் வர்க்கி என்ற கேரள இளைஞர். ’ஆறாட்டு’ படம் பற்றி கருத்துக் கூறி கேரளாவில் பரபரப்பானவர் இவர்.

நடிகை நித்யா மேனனை உண்மையிலேயே காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள ஆர்வம் இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இது கேரளாவில் பரபரப்பானது.

இந்நிலையில், இதுபற்றி நித்யா மேனனிடம் கேட்டபோது கூறியிருப்பதாவது:

அந்த இளைஞர் மீடியாவில் அளித்த பேட்டியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். முகநூல் பக்கத்திலும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருந்தார். அவர், கடந்த ஆறு வருடங்களாக என்னை தொந்தரவு செய்து வருகிறார். பல்வேறு எண்களில் இருந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் எண்களில் இருந்து அழைப்பார். அவருடைய சுமார் 30 எண்களை பிளாக் செய்திருக்கிறேன்.

இருந்தாலும் என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களிடம் பேசி, நம்பரை வாங்கியிருக்கிறார். என் அப்பா, அம்மாவையும் விடவில்லை. அவர்கள் அமைதியானவர்கள். அவர்களையும் தொந்தரவு செய்து கோபப்பட வைத்தார். என் அம்மா கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போதும் தொந்தரவு செய்தார். எனக்கு வேண்டியவர்கள், போலீஸில் புகார் கொடுக்கும்படி கூறினார்கள். அவருக்கு ஏதோ சிக்கல் இருக்கிறது. அவருக்காக பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும்.

இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in