
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ஏஜென்ட் டினாவாக நடித்த வசந்திக்கு ’நீனைவெல்லாம் நீயடா’ படப்பிடிப்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா இசையமைக்கும் 1417-வது படம், 'நினைவெல்லாம் நீயடா'. ஆதிராஜன் இயக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய, 'இதயமே இதயமே... உன்னைத் தேடித் தேடி' என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன், கதாநாயகி சினாமிகா பங்குபெறும் நடனத்தை, டான்ஸ் மாஸ்டர் இயக்குநர் தினேஷ் படமாக்கி வருகிறார்.
தினேஷிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றுபவர் வசந்தி. இவர், கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் ஏஜென்ட் டினா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர். ’நினைவெல்லாம் நீயடா’ படப்பிடிப்புக்கு வந்த வசந்திக்கு படக்குழு சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கதாநாயகி சினாமிகா, ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் ஆதிராஜன், தயாரிப்பாளர் ராயல் பாபு, நடிகர் பிரஜன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி உட்பட படக்குழுவினர் அனைவரும் வசந்தியுடன் கைகுலுக்கி வாழ்த்துக் கூறினர்.