'என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்யுங்கள்’: பிரபல நடிகையின் கரோனா அலர்ட் !

'என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்யுங்கள்’: பிரபல நடிகையின் கரோனா அலர்ட் !

பிரபல நடிகைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர், இந்தி நடிகை நிக்கி தம்போலி. சல்மான் கான் தொகுத்து வழங்கிய, இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நிக்கி பிரபலமடைந்தார். இந்தி சின்னத்திரை தொடரிலும் நடித்து இவர், மியூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இயக்கி வரும் நிக்கி தம்போலிக்கு கடந்த வருடம் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'கடுமையான அறிகுறிகளுடன் கோவிட் 19 சோதனை செய்தேன். எனக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து முகக் கவசம் அணியுங்கள், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in