`டார்ச்சர் செய்தார், கண்ணீர் விட்டு கதறினேன்’- `காஞ்சனா 3’ நடிகை பகீர்

`டார்ச்சர் செய்தார், கண்ணீர் விட்டு கதறினேன்’- `காஞ்சனா 3’ நடிகை பகீர்

தென்னிந்திய இயக்குநர் ஒருவர், தன்னைக் கடுமையாக சித்ரவதை செய்தார் என்றும் அவமானப்படுத்தினார் என்றும் ’கஞ்சனா 3’ பட நடிகை பகீர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில், காஞ்சனா 3 படத்தில் நடித்தவர் நிக்கி தம்போலி. இவர், ’இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் தெலுங்கு ரீமேக், திப்பற மீசம் என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார். இப்போது இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தென்னிந்திய இயக்குநர் ஒருவர், தன்னை டார்ச்சர் செய்ததாகவும் அவமானப்படுத்தியதாகவும் பகீர் புகார் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ``அந்த தென்னிந்திய இயக்குநர் என்னை மோசமாக நடத்தினார். அது தவறான நோக்கத்துக்காக அல்ல. என்னுடன் இருந்த நடனக் கலைஞர்களை அதிகமாகப் பாராட்டிய அவர், ’இவங்கலாம் எங்கயிருந்து வந்தாங்களோ?’ என்ற அர்த்தத்தில் என்னை அவமானப்படுத்தினார். அவர் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அந்த மொழியில் பேசத் தெரியாததால் அவமானப்படுத்தினார். அது எனக்கு நடந்த மிக மோசமான அனுபவம்.

வீட்டுக்கு வந்தும் கண்ணீர் விட்டு அழுதேன். என் பெற்றோருக்கும் இது தெரியும். வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருந்தபோதும் அந்த இயக்குநரால் சித்ரவதை செய்யப்பட்டேன். ஆனால், இதற்காக அவர் ஒருநாள் வருத்தப்படுவார் என்பது எனக்குத் தெரியும். அதுதான் நடந்தது. இப்போதும் அவர் எனக்கு மெசேஜ் அனுப்புகிறார். காலம் மாறிவிட்டதல்லவா?'' என்றார்.

Related Stories

No stories found.