நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி திருமண நிச்சயதார்த்தம்

நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி திருமண நிச்சயதார்த்தம்
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகத நாணயம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. சமீபத்தில் ’கிளாப்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து லிங்குசாமி இயக்கும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் ’யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் மலர்ந்தது.

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி

கரோனா காலகட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள நடிகை ஆதியின் வீட்டில் நடிகை நிக்கி கல்ராணி தங்கி இருந்தார். ஆதியின் தந்தை பிறந்தநாள் விழாவிலும் நிக்கி கல்ராணி கலந்துகொண்டிருந்தார். அப்போதே இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அதுபற்றி செய்திகள் வெளியான போதும் இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை.

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி

நடிகர் ஆதி, `திருமணம் நடக்கும்போது நானே அறிவிப்பேன்' என்று கூறியிருந்தார். இந்நிலையில், இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மோதிரம் மாற்றிக்கொண்ட இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in