தியேட்டர்ல படம் பார்க்கத்தான் பிடிச்சிருக்கு: நிதி அகர்வால்

தியேட்டர்ல படம் பார்க்கத்தான் பிடிச்சிருக்கு: நிதி அகர்வால்
நடிகை நிதி அகர்வால்

திரைப்படங்களை தியேட்டர்களில் பார்க்கவே பிடித்திருக்கிறது என்றும் அதற்காக ஓடிடியை ஒதுக்கவில்லை என்றும் நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழில், சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ படங்களில் நடித்திருப்பவர் நிதி அகர்வால். தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அவர், தியேட்டர்களில் படம் பார்ப்பதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

“ஓடிடியில் அதிகமான திரைப்படங்களைப் பார்க்கிறேன். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு படத்தை தியேட்டரில் வெளியிடுவதா, ஓடிடியில் வெளியிடுவதா என்பது, தயாரிப்பாளர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், பார்வையாளராக, ஓடிடியில் பார்க்கும்முன், தியேட்டர்களில் படம் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறேன்.

தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இந்தியில் நான் நடித்த ’முன்னா மைக்கேல்’ கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு இந்தியில் பார்க்க முடியவில்லையே என்று கேட்கிறார்கள். இப்போது இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறேன். என் கேரியரில் நான் இப்போது இருக்கும் நிலையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்”.

இவ்வாறு நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.