உரிய முடிவுகள் எடுக்க இது சரியான நேரம்: நடிகை சமந்தாவின் முக்கிய பதிவு

 உரிய முடிவுகள் எடுக்க இது சரியான நேரம்: நடிகை சமந்தாவின் முக்கிய பதிவு

புதுவருடத்திற்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை சமந்தா வர இருக்கும் புதுவருடத்திற்கு உற்சாகம் தரும் வகையில் தனது புகைப்படத்துடன் பதிவு ஒன்றை தன்னுடைய அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், " முன்னேறிக் கொண்டே இருங்கள். மனதை நம் கட்டுப்பாடிற்குள் வையுங்கள். நம்மால் கட்டுப்படுத்த முடிந்த செயல்களைக் கட்டுப்படுத்துங்கள். புதிய மற்றும் எளிமையான செயற்பாடுகள் மற்றும் உரிய முடிவுகள் எடுக்க இது சரியான நேரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மீது அன்பும் கருணையும் வையுங்கள். அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துகள்!’ எனக் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய சமந்தா தற்போது மையோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக தென் கொரியா சென்றுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களுக்கு புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆகாமல், ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் இருந்தும் விலகுவதாகவும் சமந்தா முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அவர் சீக்கிரம் உடல்நலன் சரியாகி பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in