அப்செட் அஜித் ரசிகர்கள்: உற்சாகமூட்டிய அப்டேட்

அப்செட் அஜித் ரசிகர்கள்: உற்சாகமூட்டிய அப்டேட்

ட்விட்டரில், வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அன்பு ரகளை செய்யாத நாட்கள் குறைவு. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத அப்டேட், நேரடியாக அஜித்குமாரிடம் இருந்தே இன்று வந்தது. ’என்னை இனிமேல் தல என்று அழைக்காதீர்கள்’ என அன்புக் கட்டளை போட்டிருக்கிறார் ஏ.கே என்கிற அஜித்குமார்.

சமூக ஊடகங்களில் ’தல தோனி - தல அஜித்’ என்று எழுந்த விவாதங்களில் எதிர்வினையாற்றிய சில அஜித் ரசிகர்களால், இப்படி ‘தல’ பட்டத்தை துறக்கும் முடிவுக்கு அஜித் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் அதிரடி அறிவிப்பை எதிர்பாராத அவரது ரசிகர்கள் சோர்ந்து போனார்கள்.

சோர்ந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில், அடுத்த சில மணி நேரங்களில் வலிமை அப்டேட் யூடியூப் வாயிலாக வந்து சேர்ந்தது. திரைப்படத்தின் 2-வது பாடலுக்கான டீஸர் இது. யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் எழுதி, சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாட்டு குறித்த அறிவிப்பை டீஸராக வெளியிட்டிருக்கிறார்கள்.

’நான் பார்த்த முதல் முகம் நீ; நான் கேட்ட முதல் குரல் நீ’ என்று அஜித் குரல் ஒலிக்க, இந்த 2 வரிகளை மட்டும் சித் ஸ்ரீராம் பாடுகிறார். முழுப் பாடல் டிச.5 அன்று வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in