நடிகர் ரஜினியின் 'பாபா' படத்தின் மறு வெளியீட்டுக்கான புது டிரெய்லர் வெளியீடு

நடிகர் ரஜினியின் 'பாபா' படத்தின் மறு வெளியீட்டுக்கான புது டிரெய்லர் வெளியீடு

நவீன தொழிற்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த படம் 'பாபா'. கடந்த 2002-ம் ஆண்டு திரைக்கு வந்த 'பாபா' படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் ரஜினி காட்டும் பாபா முத்திரை அவரின் தனி அடையாளமாகவே மாறியது.

தற்போது 'பாபா' படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு 'பாபா' படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். ஆரம்பத்தில் அவரது உரையோடு படம் தொடங்க உள்ளது. அத்துடன் படத்தில் உள்ள சில குறிப்பிட்ட காட்சிகளுக்குப் புதிதாக குரல் பதிவும் செய்துள்ளார். இந்த நிலையில் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ள 'பாபா' படத்தின் புதிய டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

இதனை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், "என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு திரைப்படம்.' பாபா' ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in