டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரிக்கும் ‘ராட்’!

டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரிக்கும் ‘ராட்’!

விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் ஏராளம்.

இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு ஒரு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது, அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா இல்லையா என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் ‘ராட்’.

ஆம்ரோ சினிமா நிறுவனம் முதல் படைப்பாக ஸ்ரீ பா.ராஜராஜன் வழங்கி அதை திருமதி முத்துலெட்சுமி ராஜராஜன்தயாரிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்குகிறார். கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட் நடிக்கிறார். சாயா தேவி, கன்னிகா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு இக்னேசியஸ் அஸ்வின். இசை அஸ்வின் ஹேம்நாத். வசனம் கருந்தேள் ராஜேஷ்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.