’லியோ’ திரைப்படத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்... ரசிகர்கள் அதிர்ச்சி!

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என திரையரங்குகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள்ளாகவும் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் , சிறப்பு காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in