இந்தி `விக்ரம் வேதா' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான்
விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான்

இந்தியில் ரீமேக் செய்யப்படும் விக்ரம் வேதா படத்தில் ஹிரித்திக் ரோஷன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடித்துள்ள புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜோடியான புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படம் மெகா ஹிட் ஆனது. நடிகர் மாதவன் விக்ரம் கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாகவும், விஜய் சேதுபதி வேதா கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராகவும் மிரட்டலாக நடிக்க வெளிவந்த படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் இந்திய அளவில் பலரது பாராட்டுகளையும் பெற்றது. தற்போது, விக்ரம் வேதா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான சைஃப் அலிகான் விக்ரம் கதாபாத்திரத்திலும், ஹிரித்திக் ரோஷன் வேதா கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான்
விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான்

மேலும் ராதிகா அப்தே, ரோஹித் சரஃப் மற்றும் ஷரீப் ஹாஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தியிலும் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் உருவாகும் விக்ரம் வேதா படத்திற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம்வேதா ரீமேக் படத்தை யூ நாட் ஸ்டூடியோஸ் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளான் சி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. சில வாரங்களுக்கு முன் ஹிரித்திக் ரோஷனின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் விதமாக வேதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடித்துள்ள புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in