இணையத்தில் புதிய படம் கசிந்தது: நடிகர் தனுஷ் அதிர்ச்சி

இணையத்தில் புதிய படம் கசிந்தது: நடிகர் தனுஷ் அதிர்ச்சி

தனுஷ் நடித்த புதுப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. தனுஷை வைத்து ஏற்கனவே 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். தற்போது 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளைத் திருட்டுத்தனமாக செல்போனில் வீடியோவாக எடுத்து மர்மநபர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளில், திருவிழாவில் தனுஷுடன் நித்யா மேனன் நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால் நடிகர் தனுஷ் உள்பட படக்குழு அதிர்ச்சியடைந்தது. இந்தக் காட்சிகளை இணையதளத்தில் யார் வெளியிட்டது என்று படக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.