அமிதாப் பச்சன் பாராட்டிய ‘கப்ஜா’

’கப்ஜா’ கலைஞர்கள்
’கப்ஜா’ கலைஞர்கள்

கன்னட நட்சத்திரங்களான உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்த ’கப்ஜா’ திரைப்படம் மார்ச் 17 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பான் இந்தியா படைப்பாக உருவான ’கப்ஜா’வை தமிழில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. அண்மையில் மிரட்டலாக வெளியான இதன் டிரெய்லர், திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. கப்ஜா திரைப்படத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெகுவாக பாராட்டியதாக, படத்தின் இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கப்ஜா திரைப்படத்தின் சார்பில் நேற்று சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்று நடிகர் உபேந்திரா பேசினார். அப்போது, "இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன்" என்று உபேந்திரா தெரிவித்தார்.

கன்னடத்தில் உருவான கப்ஜா திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மொழி மாற்றத்துடன் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in