வடிவேலுவை சீண்டிய கிங்ஸ்லி?

வடிவேலுவை சீண்டிய கிங்ஸ்லி?

’கம் பேக்’ வடிவேலுவை சுற்றி வம்புகளும் வளர்ந்து வருகின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் வைகைப் புயல் வடிவேலு. லைகா நிறுவனம் தயாரிப்பில், தனது பிரியத்துக்குரிய சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை, மிகுந்த நம்பிக்கையுடன் வடிவேலு எதிர்பார்த்து இருக்கிறார். திரைப்படத்துக்கான டைட்டில் தகராறு, நடிகர் இயக்குநர் என படக்குழுவினர் ஒமைக்ரானில் விழுந்து எழுந்தது என படம் தொடங்கியது முதலே சவால்களுக்கு பஞ்சமில்லை.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவில் வடிவேலு மற்றும் கிங்ஸ்லி
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவில் வடிவேலு மற்றும் கிங்ஸ்லி

இந்த வரிசையில் நடிகர் கிங்ஸ்லீ வாயிலாகவும் புதிய சர்ச்சை ஒன்று நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் மூண்டுள்ளது. அண்மை திரைப்படங்களில், வித்தியாசமான நகைச்சுவையால் பிரபலமாகி வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் தோன்றுகிறார். இந்த கிங்ஸ்லிக்கும், நடிகர் வடிவேலுக்கும் படப்பிடிப்பு தளத்தில் உரசல் எழுந்திருப்பதாக கோலிவுட் பட்சிகள் பரபரக்கின்றன.

இன்றைய படப்பிடிப்புக்காக நடிகர் ரெடின் கிங்ஸ்லீ மணிக்கணக்கில் தாமதமாக வந்தாராம். கிங்ஸ்லீக்காக காத்திருந்து பார்த்த வடிவேலு, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து படப்பிடிப்பு தளத்தைவிட்டே கோபத்தில் வெளியேறி விட்டாராம். அடுத்து என்ன நடக்கும் என்று ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு பதட்டத்துடன் காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in